சீனா எச்சரித்த பிறகும் ஆதரவு: அமெரிக்காவுக்கு தைவான் நன்றி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 நாள் பயண​மாக சீனா சென்றுள்​ளார். சீன அதிபர் ஜி ஜின் ​பிங்கை அவர் நேற்று சந்தித்தார்.

அப்​போது, “சீன – அமெரிக்க உறவில் தைவான் பிரச்​சினை மிக முக்​கியமானது. அதை சரிவர கையாளா​விட்​டால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்​பட்டு உறவும் ஆபத்​தில் சிக்கும்”என்​று ஜின்​பிங் எச்​சரித்​தார்.

சுயாட்சி தீவான தைவானை சீனா சொந்​தம் கொண்​டாடி வருவதை ஏற்​காத அமெரிக்​கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு அளித்து வரு​கிறது. இந்​நிலை​யில் ஜின்​பிங்​கின் எச்சரிக்கை பதற்றத்தை ஏற்​படுத்​தி​யது.

இதுகுறித்து தைவான் பிரதமரின் செய்​தித் தொடர்​பாளர் மிஷேல் லீ கூறுகை​யில், “பி​ராந்​திய ஸ்திரத்​ தன்​மைக்கு பங்​களிக்​கும் மற்றும் சர்​வா​தி​கார விரி​வாக்​கத்​தால் ஏற்​படக்​கூடிய அபாயங்களை நிர்​வகிக்​கும் அனைத்து நடவடிக்​கைகளை​யும் எங்​கள் அரசு சாதக​மாகப் பார்க்​கிறது.

தேசி​யப் பாது​காப்பு மற்​றும் ராஜதந்​திரம் தொடர்​பாக அமெரிக்கா​வுடன் தைவான் நெருங்​கிய தொடர்​பில் இருக்கிறது. தைவானை ஆதரிக்​கும் தனது உறு​தி​யான நிலைப்​பாட்டை அமெரிக்கா​வும் பலமுறை தொடர்ந்து வலி​யுறுத்​தி​யுள்​ளது. இதற்காக நன்றி தெரிவிக்கிறோம். இவ்​வாறு மிஷேல்​ லீ கூறி​னார்​.