சூடானில் துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 ஆயிரம் பேர் கொன்று குவிப்பு- ஐ.நா. குற்றச்சாட்டு

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.ராணுவம் தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையி லான ‘சூடான் ஆயுதப் படை’கள் செயல்படுகின்றன.

துணை ராணுவம் தரப்பில் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப். எனப்படும் விரைவு அதிரடிப் படை செயல்பட்டு வருகின்றன.தொடக்கத்தில் இருவரும் இணைந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிறகு துணை ராணுவத்தை அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது தொட பான பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரை கைப்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எப். படைகள் கடந்த அக்டோபர் மாதம் கொடூர தாக்குதலை நடத்தின.அப்போது அக்டோபர் 25 முதல் 27 வரையிலான வெறும் 3 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 400 அப்பாவி பொதுமக்கள் நகருக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தப்பி ஓட முயன்ற குழந்தைகள் உள் பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தனர்.துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட் டது. மேலும், ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களை குறிவைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமை களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரியை சிறைச்சாலையாக மாற்றி ஆயிரக்க ணக்கானோரை அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.

இந்த போரில் இதுவரை 1% லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1% கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.