ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​ வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்படும் அபாயம்!

ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், சுனாமி ஆபத்​தும் ஏற்​படலாம் என்றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் கடந்த திங்​கள்​கிழமை சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக பதிவானது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்​சரிக்​கை​யும் விடுக்​கப்​பட்​டது. ஆனால் எதிர்​பார்த்​தது போல சுனாமி எது​வும் வரவில்​லை. ஆனால், நிலநடுக்​கத்​தால் 34 பேர் காயமடைந்​தனர்.

இந்த சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்டு 2 நாட்​கள் மட்​டுமே​ஆன நிலை​யில் அடுத்த ஒரு வாரத்​துக்​குள் ஜப்​பானில் மீண்​டும் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், பயங்​கர​மான சுனாமி பேரலைத் தாக்​குதல் நிகழலாம் என்​றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இந்த நிலநடுக்​கம் ஏற்​படும்​போது, 98 அடி உயர சுனாமி அலைகள் ஜப்​பானின் கடலில் எழ வாய்ப்​பிருப்​ப​தாக​வும், இதனால் 2 லட்​சம் பேர் உயி​ரிழக்​கும் அபா​யம் ஏற்​படலாம் என்​றும் ஜப்​பான் அரசு எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

இந்த சக்​தி ​வாய்ந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 8 புள்​ளி​களாக இருக்​கலாம் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 2011-ல் ஜப்​பானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தைத் தொடர்ந்து சுனாமி ஏற்​பட்டு 20 ஆயிரம் பேர் உயி​ரிழந்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த சுனாமி பேரலை காரண​மாக புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலை​ய​மும் வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டது.