ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை கொன்ற அமெரிக்கர்

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள்

அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள Neuschwanstein Castle என்னும் புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

 

இந்த மாளிகை பல்வேறு திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளதுடன், டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர்: சமீபத்திய தகவல் | Neuschwanstein Accust Fights Extradition To Us

ஆகவே, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Schwangau என்னுமிடத்தில் அமைந்துள்ள அந்த மாளிகையைக் காண, ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.

கொடூர நபரிடம் சிக்கிய பெண்கள்

இந்நிலையில், அந்த மாளிகைக்கு சுற்றுலா சென்ற ஈவா மற்றும் கெல்சியை சந்தித்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Bohling, 33) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி அவர்களை ஒரு பாலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 

 

 

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர்: சமீபத்திய தகவல் | Neuschwanstein Accust Fights Extradition To Us

ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும் ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர்.கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயர பாலத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார். கைது செய்யப்பட்ட ட்ராய்க்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு

ட்ராயின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட வெளியுறவு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர்: சமீபத்திய தகவல் | Neuschwanstein Accust Fights Extradition To Us

ஆனால், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து Augsburg நகரிலுள்ள நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ட்ராய்.

தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்தினால், அங்கு தன் குற்றங்களுக்காக மீண்டும் ஒரு வழக்கு விசாரணையை தான் எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்காவில் தனக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார் ட்ராய்.

 

 

 

 

 

 

 

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர்: சமீபத்திய தகவல் | Neuschwanstein Accust Fights Extradition To Us

விடயம் என்னவென்றால், ஜேர்மன் சட்டப்படி, 20 முதல் 25 ஆண்டுகளுக்கு ஜேர்மன் சிறையில்தான் செலவிட இருக்கிறார் ட்ராய்.

ஆக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை நாடுகடத்தும் ஆணை நிறைவேற்றப்படாமலும் போகலாம். இந்நிலையில், தனது தண்டனைக்காலத்துக்குப் பிறகு அவர் நாடுகடத்தப்படுவதைக் குறித்து, இப்போதைக்கு எந்த மறு ஆய்வு நடைமுறையும் இல்லை என அரசு சட்டத்தரணி அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.