ஜேர்மன் மாகாணமொன்றில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் Christian Democrats (CDU) கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
அக்கட்சி 29.7 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அதன் கூட்டணிக்கட்சியான Social Democrats (SPD) கட்சி, 20.2 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.சமீபத்தில், Baden-Württemberg மாகாணத்தில் நடந்த தேர்தல்களில், சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த ஆளும் CDU கட்சி கிரீன்ஸ் கட்சியிடம் தோல்வி கண்டிருந்த நிலையில், Hesse மாகாணத் தேர்தல், அவருக்கு ஒரு பரீட்சை என ஊடகங்கள் எழுதிவந்தன.
ஆக, மெர்ஸின் CDU கட்சி Hesse மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது மட்டுமல்ல, கிரீன்ஸ் கட்சி மூன்றாவது வலிமையான கட்சி என்ற நிலையையும் இழந்துவிட்டது.
விடயம் என்னவென்றால், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியும் வலதுசாரிக் கட்சியுமான Alternative for Germany (AfD) கட்சி, 14.4 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது.




