அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிடும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அதற்கு முக்கிய பதில் அளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாமல் தோல்வியில் முடிந்துள்ளன.
இதையடுத்து, ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிட அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இன்று இரவு முதல் அமெரிக்க கடற்படைகள் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்து இந்த வழியாக நடைபெறுவதால், இந்த முடிவு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் முக்கிய விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு வேண்டுகோளும் வரவில்லை. இந்த நடவடிக்கையில் பங்கேற்குமாறு எங்களை அணுகவில்லை.
மேலும், பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஹோர்மூஸ் நீரிணை அனைவருக்கும் திறந்திருப்பதை காண விரும்புகிறோம். சர்வதேச சட்டத்தின்படி கடற்பயணம் சுதந்திரமாக நடைபெற வேண்டும்.
ஹோர்மூஸ் நீரிணையை மையமாகக் கொண்ட இந்த புதிய பதற்றம், உலக பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக மாறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.



