பாகிஸ்தானில் லஷ்கர் தீவிரவாதி கொலை

பாகிஸ்​தானில் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் முக்​கி​யத் தளப​தி​யான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்​குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்​களாலேயே கத்​தி​யால் குத்​தப்​பட்​டும், துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டும் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

முரிட்கே பகு​தி​யில் உள்ள லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பின் உருக்குலைந்த தலை​மையகத்​திற்கு அரு​கிலேயே இந்​தச் சம்பவம் நடை​பெற்​றுள்​ள​தாக உளவுத்​துறை வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

குடும்​பத் தகராறு காரண​மா ?: இந்​தக் கொலைக்​கான துல்லியமான காரணம் இன்​னும் வெளிவ​ராத நிலை​யில், இது சொந்த குடும்​பத் தகராறால் ஏற்​பட்​டிருக்​கலாம் என சந்தேகிக்கப்படு​கிறது. கொலை​யில் தொடர்​புடைய நபர்​களைப் பாகிஸ்​தான் காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ள​தாகத் தகவல்கள் தெரிவிக்​கின்​றன. தீவிர​வாதி சராபி உயி​ரிழந்து கிடக்கும் காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் பரவி வந்​தா​லும், அதன் நம்​பகத்​தன்மை இன்​னும் உறுதி செய்​யப்​பட​வில்​லை.

பிலால் ஆரிப் சராபி, முரிட்கே மையத்​தில் இளைஞர்​களை தீவிரவாத பாதை​யில் திருப்​புவதை​யும், அவர்​களுக்​குத் தீவிரவாதக் கொள்​கைகளைப் போதித்து மூளைச்​சலவை செய்வதை​யும் வாடிக்​கை​யாக வைத்​திருந்​தார். எனினும், இவர் இந்​தி​யா​வில்​ தேடப்​படும்​ குற்​ற​வாளி​கள்​ பட்​டியலில்​ இல்​லை என்பது குறிப்​பிடத்​தக்​கது.