பிரான்சுக்குச் சென்ற பிரித்தானிய இளம்பெண் மாயம்

கால்பந்து போட்டி ஒன்றைக் காண்பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குச் சென்ற பிரித்தானிய இளம்பெண்ணொருவர் மாயமாகியுள்ளார்.

பிரித்தானிய இளம்பெண் மாயம்

இங்கிலாந்தின் கென்டிலுள்ள Tonbridge என்னுமிடத்தைச் சேர்ந்தவர் லூசி ஸ்டெம்ப் (28). ஒரு குழந்தைக்குத் தாயான லூசி, பிரிட்டனியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைக் காண்பதற்காக பிரான்சுக்குச் சென்றிருந்தார்.

பிரான்சுக்குச் சென்ற பிரித்தானிய இளம்பெண் மாயம் | Appeals Launched British Women Missing In Paris

பின்னர் கால்பந்து விளையாட்டுப்போட்டி ஒன்றைக் காண்பதற்காக பாரீஸ் சென்ற அவர், Bercy என்னுமிடத்தில் தங்கியிருந்துள்ளார்.மே 30ஆம் திகதிதான் PSG மற்றும் Arsenal அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது.

விடயம் என்னவென்றால், மே மாதம் 30ஆம் திகதி மாலையிலிருந்துதான் லூசியைக் காணவில்லை.

இந்நிலையில், லூசியின் தாயும், அவரது வளர்ப்புத் தந்தையும், லூசியை யாராவது பார்த்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பிரான்சுக்குச் சென்ற பிரித்தானிய இளம்பெண் மாயம் | Appeals Launched British Women Missing In Paris

லூசி மாயமான விடயத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகமும் உறுதி செய்துள்ளதுடன், லூசியைக் கண்டுபிடிப்பது தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பதாகவும், லூசியின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கென்ட் பொலிசாரும், இண்டர்போல் முதலான அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் லூசியை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.