மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களை கடந்தது

சர்வதேச சந்தையில் பிரென்ட்  மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து அதிகரித்துள்ளது.

ஆசிய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மசகு எண்ணெய் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 103.69  அமெரிக்க டொலராக பதிவாகியது. அதேவேளை, நைமெக்ஸ் லைட் ஸ்வீட் மசகு  எண்ணெய் விலை 3.42 சதவீதம்  அதிகரித்து 91.55 அமெரிக்க டொலராக பதிவாகியது.

முன்னதாக, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலையில், ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்ததுடன், விரைவில் சமாதான ஒப்பந்தம் எட்டப்படலாம் என தெரிவித்தமையால் திங்களன்று பிரென்ட் விலை 10  சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது.

ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய தகவலை தெஹ்ரான் மறுத்துள்ளதால், முதலீட்டாளர்கள் மீண்டும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதால் விலைகள் மீள அதிகரித்துள்ளன.