ரஷ்யாவின் உளவுத் தகவல்களால் திணறும் அமெரிக்கா – ஈரானின் துல்லிய தாக்குதல்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.

இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை என்றாலும் கூட ரஷ்யாவின் உளவுத்துறை தகவல்கள் இதில் முக்கிய பங்காற்றி இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள், விமானங்களின் துல்லியமான இருப்பிடங்கள் உட்பட முக்கியமான உளவுத் தகவல்களை ரஷ்யா தான் ஈரானுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா இந்த தகவல்களை மறுத்தாலும் கூட, உளவுத் துறை தகவல்களை இரு நாடுகளும் பகிர வாய்ப்பு மிக மிக அதிகம் என்றே சர்வதேச வல்லுநர்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.