வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் அழுத்தம் அதிகரித்துள்ளமையை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இது மிகப்பெரிய எரிபொருள் தாங்கி கப்பல் , உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவைகளில் மிகப்பெரியது” என ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தாங்கி கப்பல் கைப்பற்றப்பட்ட வீடியோவை வெளியிட்ட அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி, இந்தக் கப்பல்  “வெனிசுவெலாவிலிருந்து ஈரானுக்கு எரிபொருளை கொண்டு சென்ற கப்பல் ” எனத் தெிரவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு வெனிசுவெலா உடனடியாகக கண்டனத்தை வெளியிட்டது. “சர்வதேச கடற்கொள்ளை” செயல் எனக் குறிப்பிட்டது.

ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுவெலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை அனுப்புவதாகக் குற்றம் சாட்டி வருவதோடு, அண்மைய மாதங்களில் ஜனாதிபதி மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய எரிபொருள் வளங்களை கொண்ட நாடுகளின் சிலவற்றுக்கு தாயகமான வெனிசுவெலா, அமெரிக்காவின் வளங்களை திருட முயற்சிப்பதாக வொஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது.

எரிபொருள் தாங்கி கப்பல் கைப்பற்றப்பட்டமை தொடர்பான செய்தி வெளியாகியமையினால்  குறுகிய கால விநியோக கவலைகளைத் தூண்டியதால் புதன்கிழமை பிரெண்ட் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கை கப்பலில் எரிபொருளை ஏற்றுமதி செய்பவர்களை அச்சுறுத்துவதோடு,  வெனிசுவெலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் சீர்குலைக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.