எமது நடவடிக்கைக்கு ஆதரவாக தனது படைத் தளங்களை பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துவிட்டது. பரவாயில்லை எந்த தளங்களையும் பயன்படுத்த நாங்கள் எவரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. தேவைப்பட்டால் பயன்படுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எவ்வாறாயினும் ஸ்பெயினுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்துமாறு நான் பணித்துள்ளேன். பிரிட்டன் தொடர்பிலும் எனக்கு அதிருப்தி உண்டு.
ஈரான் மீதான நடவடிக்கை சில காலங்கள் நீடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.




