ஹோர்முஸ் நீரிணை மீள்திறப்பு

அமெரிக்காவும் ஈரானும் முக்கியமான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த உடன்பாடு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகை நீக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், உடன்பாட்டுக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டவுடன் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எனினும், உடன்பாட்டின் முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கான உத்தியோகபூர்வ கையெழுத்து விழா வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance பங்கேற்கவுள்ளதாகவும், ஜனாதிபதி Donald Trump கூட கலந்து கொள்ளக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு அடுத்த 60 நாட்களுக்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.