இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க காலதாமதமின்றிக் கனடா அரசு கைகொடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவில் பிரம்டன் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈழத்தில் தமிழினத்திற்கெதிராகச் சிங்கள- பெளத்த அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கனடாவின் பிரம்டன் நகரில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கின்றமையை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்கு ஒத்துழைத்த கனடா அரசுக்கும், பிரம்டன் நகராட்சிக்கும், பிரம்டன் நகர மேயருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.





