செம்மணியில் புதைக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி கனடாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்

செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் கண்டன மற்றும் கவன ஈர்ப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) மாலை-03 மணி முதல் மாலை-06 மணி வரை கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள டன்டாஸ் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இப் போராட்டத்தில் தமிழ்மக்களை அணிதிரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.