செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையுடனும் கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.
சிறுவர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது.இலங்கையிலும் வெளிநாடுகளிலும்.
இது தனிப்பட்ட ஒரு சம்பவம் இல்லை மாறாக பல தசாப்தகால காணாமல்போதல், அரசபயங்கரவாதம்,பதில்கள் இன்றி பொறுப்புக்கூறல் இன்றி தமிழ் குடும்பங்கள் அனுபவித்துவரும் துயரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை ஆகியவற்றின் துயரம் மிகுந்த பாரம்பரியமாகும்.
கடந்த 25 வருடங்களாக செம்மணி தமிழ் சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை கடுமையாக பாதித்துவந்துள்ளது.இந்த பகுதி நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் , படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள்,இரகசியமாக உடல்கள் புதைக்கப்படுதல் ஆகியவற்றுடன் நீண்டகாலமாக தொடர்புபட்ட பகுதியாகும்.
அதன் மோசமான தன்மை குறித்து தெரிந்திருந்தாலும் சிறிய பகுதியே தோண்டப்பட்டுள்ளது.மேலும் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் உரிய காரணங்கள் தெரிவிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டன.
மன்னார் ,கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாததும்,தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை மோசமாக பாதித்துள்ளன.
நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சமீபத்தைய கண்டுபிடிப்பு உண்மைக்கான மற்றுமொரு வாய்ப்பு தவறவிடப்படுதலாக அமையும்.
மனித உரிமை நீதிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள அமைப்பு என்ற அடிப்படையில் இந்த தருணத்தினை தீவிரமாக கருதுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் அலுவலகத்தை வெளிப்படையான முழுமையான மனித புதைகுழிகளை தோண்டும் கட்டமைப்பை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அது தெளிவான காலவரையறை,முறையியல், பொதுமக்களிற்கு அறிவித்தல் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும்.
சர்வதேச தடயவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அகழ்வு ஆய்வின் ஒரு பகுதியாகயிருப்பதற்கு அழையுங்கள்.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை உறுதிசெய்யுங்கள்.
தலையீடுகள் அல்லது ஆதாரங்களை தங்களிற்கு சாதகமாக மாற்றுதல்ஆகியவற்றை தவிர்ப்பதற்காகஅந்த பகுதியில் பணியாற்றுபவர்களிற்கு போதுமான வளங்களையும் பாதுகாப்பையும் வழங்குங்கள்.





