பிரான்ஸில் சாதனை படைத்த ஈழத்தமிழர்

பிரான்ஸில் ஈழத்தமிழர் பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

தலைநகர் பாரிஸில் சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜெகதீபன் 142 போட்டியாளர்களை வீழ்த்தி Grand Prix de la Baguette de Tradition Franchise de la Ville de Paris 2026 பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், அவரது பேக்கரியான Fournil Didot பேக்கரி 4,000 யூரோ பரிசை வென்றுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு பாண் வழங்குவதற்கான ஒரு வருட ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார்.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில், இலங்கையை சேர்ந்த பேக்கரான தர்ஷன் செல்வராஜா, பாரிஸில் சிறந்த பாண் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஈழத்தமிழர் என்ற வரலாற்றைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.