16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள், பிரித்தானியா
மே 18, 2025 ஞாயிற்றுக்கிழமை
ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திர வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர்.
வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது.
தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம், அயராது செயல்படுவோம், சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)




