26/11/2025 அன்று மேதகு 71 அகவை தினத்தில் அலைகடலென பங்கெடுத்து நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமாரந்த நன்றிகள், அத்தோடு மாணவர்களை நிகழ்வுகளுக்குத் தயார் செய்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் நிகழ்வுகளை சிறப்பாக வழங்கிய மாணவச்செல்வங்களுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆசிரியர்களுக்கும் தாமாக முன்வந்து சிற்றூண்டிகளை தாயார் செய்து தந்து உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டும் வகையில் எங்கள் பெற்றோர்கள் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் எங்கள் இளைய தலைமுறையினர் என உங்கள் அனைவரின் பங்களிப்புக்கும் நாம் தலைவணங்குகின்றோம், இந்த மக்கள் கூட்டம் எமது சங்கத்திற்கு மிகப்பெரும் உத்வேகத்தை அளிக்கின்றது இனிவரும் காலங்களிலும் நாம் சிறப்பாகசெயற்பட்டு ஒரு வளமான எதிர்காலத்தலைமுறையை உருவாக்குவோம் என்று உறுதி ஏற்போம்
தமிழ்ச்சங்கம் நூவாசி லூ செக்





