18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
Ad Space
Ad Space
களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்கஹதொட்டுபல பகுதியில், 18 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (18) மாலை வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே பெருமளவான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கமைய 18 கிலோ 716 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்திய மின்சாரத் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைதான நபர் அளுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ச்செயல்களில் ஈடுபடும் இரு நபர்களின் வழிகாட்டலின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிப்பதற்காகவே இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space