உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைனின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (30)மேற்கு நகரமான லிவிவ்வில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கொலையாளியைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய ஒருவர் பருபி மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் அரச சட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில், தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

54 வயதான பருபி, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்தார். 2016 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2019 வரை நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தார்.

அத்துடன் 2013-14 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளுக்கு அழைப்பு விடுத்த போராட்டங்களின் தலைவர்களில் ஒருவராக அவர் செயற்பட்டார்.

உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை | Former Speaker Of Ukraine S Parliament Killed

 

2014 ஓகஸ்ட் வரை உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவையின்; செயலாளராகவும் இருந்தார், அந்தக் காலகட்டத்தில் கிழக்கு உக்ரைனில் சண்டையை ஆரம்பித்த ரஸ்யா, கிரிமியா தீபகற்பத்தை தமது நாட்டுடன் இணைத்தது.

இந்தநிலையில், இந்தக் கொலைக்கும் உக்ரைனில் ரஸ்யாவின் போருக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை உக்ரைன் அதிகாரிகள் உடனடியாகக் குறிப்பிடவில்லை.