பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் மரக்குற்றிகளை எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



