2025 ஆம்ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது. அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது.
ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, ‘நவராத்திரி’ என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ‘ஒன்பது’ என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பதாகவே நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். ஒன்பது நாள் நைவேத்தியம் நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களும்,
தேவிக்கு படைக்கும் நைவேத்தியங்கள்.
முதல் நாள் – சுண்டல்
இரண்டாம் நாள் – வறுவல்
மூன்றாம் நாள் – துவையல்
நான்காம் நாள் – பொரியல்
ஐந்தாம் நாள் – அப்பளம்
ஆறாம் நாள் – வடகம்
ஏழாம் நாள் – சூரணம்
எட்டாம் நாள் – முறுக்கு
ஒன்பதாம் நாள் – திரட்டுப் பால்
ஒன்பது நாள் சித்ரான்னம்
விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை ‘சித்ரான்னம்’ என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்க வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்.
முதல் நாள் – வெண் பொங்கல்
இரண்டாம் நாள் – புளியோதரை
மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் – கதம்ப சாதம்
ஐந்தாம் நாள் – தயிர் அன்னம்
ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
எட்டாம் நாள் – பாயசம்
ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)
ஒன்பது நாள் பூக்கள்
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும்.
முதல் நாள் – மல்லிகைப் பூ மாலை
இரண்டாம் நாள் – முல்லைப் பூ மாலை
மூன்றாம் நாள் – சம்பங்கிப் பூ மாலை
நான்காம் நாள் – ஜாதிப்பூ மாலை
ஐந்தாம் நாள் – பாரிஜாதப் பூ மாலை
ஆறாம் நாள் – செம்பருத்திப் பூ மாலை
ஏழாம் நாள் – தாழம்பூ மாலை
எட்டாம் நாள் – ரோஜாப்பூ மாலை
ஒன்பதாம் நாள்- தாமரைப்பூ மாலை
ஒன்பது நாள் இசை
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும், ஒவ்வொரு இசையை வாசிப்பார்கள்.
முதல் நாள் – மிருதங்கம்
இரண்டாம் நாள் – புல்லாங்குழல்
மூன்றாம் நாள் – வீணை
நான்காம் நாள் – கோட்டு வாத்தியம்
ஐந்தாம் நாள் – ஜல்லரி வாத்தியம்
ஆறாம் நாள் – பேரி
ஏழாம் நாள் – படகம்
எட்டாம் நாள் – கும்மி
ஒன்பதாம் நாள் – கோலாட்டம்
ஒன்பது நாள் மங்கலப்பொருட்கள்
நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-
முதல் நாள் – புனுகு
இரண்டாம் நாள் – ஜவ்வாது
மூன்றாம் நாள் – கஸ்தூரி
நான்காம் நாள் – அரகஜா
ஐந்தாம் நாள் – சந்தனம்
ஆறாம் நாள் – குங்குமம்
ஏழாம் நாள் – சாந்து
எட்டாம் நாள் – ஸ்ரீ சூரணம்
ஒன்பதாம் நாள் – மை.