நாமக்கல் பிரச்சாரத்தை இபிஎஸ் ஒத்திவைத்த ரகசியம்?

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. அதன்படி 19-ம் தேதி அங்கு அவர் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், மற்ற இரண்டு நாள் பயணம் அடுத்த மாதம் 4, 5 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மழையால் ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்​மிடம் விரி​வாகப் பேசிய நாமக்​கல் மாவட்ட அதி​முக நிர்​வாகி​கள் சிலர், “நாமக்​கல் மாவட்ட அதி​முக-​வில் நாமக்​கல் மாநகரச் செயலா​ள​ரும் முன்​னாள் எம்​எல்​ஏ-வு​மான கே.பி.பி.​பாஸ்​கர், மாவட்​டச் செய​லா​ள​ரும் முன்​னாள் அமைச்​சரு​மான தங்​கமணிக்கு எதி​ராக தனி ஆவர்த்​தனம் செய்து வரு​வது தலைமை வரைக்​கும் தெரிந்த விஷ​யம் தான்.

இந்த நிலை​யில், உடல் நலமின்​மை​யால் கட்சி நடவடிக்​கை​களில் பங்​கெடுக்​காமல் இருந்த தங்​கமணிக்கு எதி​ராக, எடப்​பாடி​யார் மீது அவர் அதிருப்தி​யில் இருப்​ப​தாக​வும் கட்சி மாறப் போவ​தாக​வும் செய்​தி​களைப் பரப்​பி​னார்​கள். இதற்கு உடனடி​யாக மறுப்​புத் தெரி​வித்த தங்​கமணி, தனது உடல் நிலை​யை​யும் பொருட்​படுத்​தாது திருச்​சி​யில் நடை​பெற்ற எடப்​பாடி​யா​ரின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பங்​கேற்​றார்.

ஆனாலும் அவருக்கு எதி​ரான வதந்​தி​களை பரப்​பிக் கொண்டே இருக்​கி​றார்​கள். இதனால் எடப்​பாடி​யாரும் எதை நம்​புவது எதை நம்​பாமல் இருப்​பது என்று புரி​யாமல் குழப்​பத்​தில் இருக்​கி​றார்.

இந்​தச் சூழலில், நாமக்​கல் மாவட்​டத்​தில் தங்​கமணிக்கு எதி​ராக அவரது அதிருப்​தி​யாளர்​கள் அனை​வ​ரும் ஒன்று சேர்ந்து பாஸ்​கர் தலை​மை​யில் தனி அணியை உரு​வாக்​கி​விட்​டார்​கள். பாஸ்​கருக்​கும் எடப்​பாடி​யாருக்​கும் நீண்ட கால​மாக நெருக்​கம் உண்டு என்​ப​தால் பாஸ்​கர் தரப்பு குறித்து தங்கமணி ஆதர​வாளர்​கள் சொல்​லும் புகார்​களுக்கு தலை​மைக் கழகம் செவி​கொடுப்​ப​தில்​லை.

இது தங்​கமணி தரப்​புக்கு சங்​கடத்தை ஏற்​படுத்தி வரும் நிலை​யில் தான் செப்​டம்​பர் 19, 20, 21 தேதி​களில் நாமக்​கல் மாவட்​டத்​தில் எடப்​பாடி​யா​ரின் பிரச்​சா​ரப் பயணத்​துக்கு ஏற்​பா​டானது. அதன்​படி 19-ம் தேதி சேந்​தமங்​கலம், ராசிபுரம் தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார் எடப்​பாடி​யார். அப்​போதும் மழை இருந்​தது. ஆனாலும் பிரச்​சா​ரத்தை அவர் நிறுத்​த​வில்​லை.

மறு​நாள் நாமக்​கல் தொகு​தி​யில் அவர் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வ​தாக இருந்​தது. இதற்​காக பாஸ்​கர் நாமக்​கல்​லில் தடபுடலாக ஏற்​பாடு​களைச் செய்து தனது செல்​வாக்கை காட்ட நினைத்​திருந்​தார். இதையெல்​லாம் பார்த்​துக் கொண்டே வந்த தங்​கமணி தரப்​பு, மழையைக் காரணம் காட்டி எடப்​பாடி​யா​ரின் நாமக்​கல் பிரச்​சா​ரத்தை ஒத்​திவைக்க வைத்​து​விட்​டது. மாவட்​டச் செய​லா​ளரை மீறி செயல்பட முடி​யாது என்​ப​தால் எடப்​பாடி​யாரும் இதற்கு சம்​ம​தித்​து​விட்​டார்.

அதேசம​யம், பாஸ்​கரை ஓரங்​கட்ட மாநில வர்த்​தகர் அணி இணைச் செய​லா​ள​ரான ஸ்ரீதேவி மோகனை நாமக்​கல் தொகு​திக்​காக தயார்​படுத்​துகி​றார் தங்​கமணி. எடப்​பாடி​யாரை வரவேற்று நாமக்​கல்​லில் மோக​னும் சில இடங்​களில் ஃபிளெக்​ஸ்​களை வைத்​திருந்​தார். இதில் எடப்​பாடி​யார் பேசுவதற்​காக ஏற்​பா​டான இடத்​தில் மோகன் வைத்​திருந்த ஃபிளெக்​ஸ்​களை ஒரு கோஷ்டி கிழித்து துவம்​சம் செய்​தது. அதன் பிறகு அந்த இடத்​தில் பாஸ்​கர் தரப்பு ஃபிளெக்​ஸ்​களை வைத்​தது. இது போலீஸ் பஞ்​சா​யத்து வரைக்​கும் சென்ற நிலை​யில் தான் எடப்​பாடி​யா​ரின் பயணம் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

எடப்​பாடி​யா​ரின் பிரச்​சா​ரப் பயணம் ஒத்​திவைக்​கப்​பட்​டாலும் அதே​நாளில், ஏற்​கெனவே செயல்​பட்டு வரும் மாநகர அதி​முக அலு​வல​கத்தை அவசர கதி​யில் புனரமைத்து அதற்கு திறப்பு விழா நடத்​தி​விட்​டார் பாஸ்​கர். இதற்கு மாவட்​டச் செய​லா​ளர் தங்​கமணி உள்​ளிட்ட அவரது ஆதர​வாளர்​கள் யாருக்​கும் அழைப்பு இல்​லை. அதேசம​யம், தங்​கமணியை பிடிக்​காத சேந்​தமங்​கலம் முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் இதில் கலந்து கொண்​டனர்” என்​றார்​கள்.

தங்​கமணி​யை​யும் பாஸ்​கரை​யும் ஒரே தட்​டில் வைத்​துப் பார்க்​கி​றார் இபிஎஸ். நாமக்​கல் தொகு​தி​யில் பாஸ்​கரை ஓரங்​கட்ட ஸ்ரீதேவி மோகனை தயார்​படுத்​துகி​றார் தங்​கமணி. அதை​யும் மீறி பாஸ்​கருக்கு நாமக்​கல் தொகு​தி​யைக் கொடுத்​தால் அத்​தனை எளிதில் அவரை ஜெயிக்​க விட்டு விடுவார்​களா?