சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள விபத்துக்கள்

ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு ஏற்ப சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில போக்குவரத்து சட்டங்கள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விபத்துக்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், 2021ஆம் ஆண்டு, 125cc மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதற்கான வயது வரம்பு 18இலிருந்து 16ஆக குறைக்கப்பட்டது.

அதிலிருந்து, விபத்துக்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஆகவே, மீண்டும் வயது வரம்பை 18ஆக உயர்த்த அரசியல்வாதிகள் பலர் கோரி வருகிறார்கள்.

16 வயது பிள்ளைகள், தங்களுக்கு பள்ளிக்கும் வேலைக்கும் செல்லவும் பொழுதுபோக்குக்கும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் அவசியம் என்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள விபத்துக்கள்: காரணம் இதுதான் | Accidents Triple After Swiss Bike Age Limit Drop

ஆனால், வாகன பயிற்சி அளிப்பவர்களோ, சாலை பாதுகாப்புக்கு வயது அத்தியாவசியம் என்றும், பல சிறார்கள் அபாயங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.

 

 

ஆக, 125cc மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதற்கான வயது வரம்பு தொடர்பான விடயம் சுவிட்சர்லாந்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்