லெப். கேணல் விக்ரர் அவர்களின் 39 ஆம் ஆண்டிண் நினைவு!

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப்பொறுப்பாளர் திரு. நவநீதன் நிந்துலன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் பொதுப்படத்திற்கு மாவீரர் துரியோதனனின் சகோதரர் ஏற்ற, 2 ஆம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு 2ஆம் லெப். காண்டீபன் அவர்களின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி.வரதரஜா தமிழினி அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்திருந்தார்.

இன்றைய நாளில் மாவீரரான லெப். கேணல் விக்ரர் அவர்களின் 39 ஆம் ஆண்டிண் நினைவுகளையும் சுமந்து அனைவருக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இன்றைய சந்திப்பின் நோக்கமும், எதிர்காலத்தில் தேசவிடுதலையை நோக்கியும், தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைத்துளிகள் வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து

சூரியப்புதல்விகள் பாகம் 2 இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் முகவுரையை பிரான்சு தமிழப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி. சுதாகர் தர்சினி அவர்களும், வெளியீட்டுரையை மு நாள் போராளி திருமதி. விஜிதா ராஜ்குமார் அவர்கள் வாசித்தார்கள்.

தொடர்ந்து முன்நாள் போராளி திருமதி. திலீபன் சுபா அவர்கள் வழங்கிவைக்க திருமதி. விஜிதா ராஜ்குமார் அவர்கள் பெற்றுகொண்டார்.

தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. சி. பார்த்திபன் அவர்கள் தற்கால அரசியல் நிலைப்பாடுகள், பிரான்சு நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளில் பெண்களின் பங்கு, அடுத்த தலைமுறையின் அரசியல் ரீதியாக தேசவிடுதலைக்கும், குமுகாய விடுதலைக்கும் எமது வாருங்காலத் தலைமுறையினருக்கும். பெரும் பலமாக இருக்க தமது அனுபவங்களை,,ஆலோசனைகளை வழங்கி பங்காளராக இருக்க முன் வரவேண்டும். இனிவரும் காலம் இளையவர்கள் தான் உலக நீரோட்டத்தோடு எமது நியாயமான விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

தொடர்ந்து பங்கு பற்றிய செயற்பாட்டாளர்கள், முன்நாள் பெண் போராளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு 13.30 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.