கிளிநொச்சி, பளை பகுதியில் ரயில் கடவையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளாலி பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.