கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை

உக்​ரைனைச் சேர்ந்த கிரிப்​டோ வர்த்​தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனது லம்​போர்​கினி உருஸ் காரில் தலை​யில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலை​யில் இறந்து கிடந்​தார். இது தற்​கொலையா என காவல் துறை​யினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

குடோ இறப்​ப​தற்கு முன்பு நிதிச் சிக்​கல் காரண​மாக மனச்​சோர்​வில் இருந்​த​தாக அவரது குடும்​பத்​தினர் தெரி​வித்​துள்​ளனர். அமெரிக்க
அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் அண்​மை​யில் சீன இறக்​கும​திகள் மீது 100 சதவீதம் வரி விதிப்ப​தாக அறி​வித்​தார். இதனால் கிரிப்​டோ கரன்சி சந்தை கடும் வீழ்ச்​சியை சந்​தித்​தது.இதில், குடோவுக்கு 19 பில்​லியன் டாலர் வரை இழப்பு ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது​வும், குடோவின் மரணத்​துக்கு முக்​கிய காரண​மாக இருக்​கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​கிறது. ட்ரம்​பின் இந்த அறி​விப்​பால் சர்​வ​தேச சந்​தை​யில் பிட்​கா​யின் மதிப்பு 8 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.