ஜேர்மனியில் மாயமான குழந்தை சடலமாக மீட்பு

ஜேர்மனியில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் மாயமான நிலையில், அவனது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

ஜேர்மனியில் மாயமான குழந்தை

வடஜேர்மனியின் Mecklenburg-Western Pomerania மாகாணத்திலுள்ள Güstrow என்னும் நகரில் வாழ்ந்துவந்த ஃபேபியன் (Fabian) என்னும் எட்டு வயதுச் சிறுவன் கடந்த வெள்ளியன்று காணாமல்போனான்.

இந்நிலையில், செவ்வாயன்று, வனப்பகுதி ஒன்றில் ஃபேபியனின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை எப்படி உயிரிழந்தான் என்பது குறித்து பொலிசார் எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், அவனது மரணத்தின் பின்னால் குற்றச்செயல் ஒன்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.