சட்டசபையில் த.வா.க. தலைவர் வேல்முருகன் வாக்குவாதம்

சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.அப்போது, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பவானி தொகுதி பிரச்சனையை பேச அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. உள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.அமைச்சர் துரைமுருகனின் பதிலை அடுத்து அடுத்த கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு சென்றார்.

சபாநாயகரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வேல்முருகன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வான வேல்முருகன், ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி சட்டசபையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.