கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜய் தலைமையிலான தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்றும் சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.