போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் பெருந்தொகை பணத்துடன் கைது!

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெதிவெவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவன் பொலன்னறுவை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பெதிவெவ பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 02 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதித்த 30 இலட்சத்து 24 ஆயிரத்து 900  ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்