கொழும்பில் மாளிகாவத்தை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட போதிராஜாராம வீதி பகுதியில் கஜமுத்துடன் சந்தேகநபர் ஒருவர் மாளிகாவத்தை காவல் துறை நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாககாவல் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.