மத்திய மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவலி கங்கையின் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதால் பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று (20) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்லை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இன்று காலை முதல் மூன்று வான்கதவுகள் இரண்டு அடி ஆறு அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதுடன் வினாடிக்கு (செக்கன்) 7300 சதுர அடி நீரை கங்கைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் அன்றாட பயன்பாட்டுக்காக மஹாவலி கங்கைக்குச் செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை பெய்து வரும் கடும் மழை காரணமாக நேற்று (19) மாலையும் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தன.