சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டுச் சுன்னாகம் வாழ்வகம் நிறுவனம், சுன்னாகம் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில் வெள்ளைப் பிரம்புதின விழிப்புணர்வு நடைபவனி சனிக்கிழமை (18.10.2025) காலை-08.30 மணியளவில் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு முன்பாகச் சுன்னாகம் வாழ்வக நிறுவனத் தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் ஆரம்பமாகியது.
சுன்னாகம் வாழ்வக நிறுவனம் வரை விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.