ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் உள்ளராட்சி சட்டங்களை மீறிவிட முடியாது இருபாலையில் தேசிய மக்கள் சக்திக்கும் தவிசாளருக்கும் இடையில் தர்க்கம்

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையும் சட்டத்தினையும் நாட்டின் ஆளும் கட்சி என்றவகையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் மீறிவிட அனுமதிக்க முடியாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.

இருபாலைச் சந்தியில் பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்காக பிரதேச சபையிடம் விண்ணப்பித்துவிட்டு அவ் விண்ணப்பத்தினை பரிசீலிப்பதற்காக பிரதேச சபை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் போக்குவரத்துசபை போன்ற திணைக்களங்களின் பரிந்துரையை பெற்றத்தரக் கோரியிருந்த நிலையில், இருபாலைச் சந்தியில் சந்தியில் குறித்த பேருந்து நிலையத்தினை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவன் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் உள்ள10ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றம் சிலர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலர் தவிசாளரைத் தொடர்பு கொண்டு மேற்படி தரிப்பிடத்திற்று சட்டப்படியாக தங்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து தவிசாளர் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்துடன் அவ்வாறாக சட்டப்படியான அனுமதியற்ற விடயத்தில் சட்டம் ஒழுங்கு சகலருக்கும் சமன் என்ற அடிப்படையில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

தவிசாளரினால்  தரிப்பிடத்தின் பெயர்ப்பலகையினை சேதமற்ற வகையில் அகற்றுவதுடன் உடனடியாக சபையினைத் தொடர்புகொண்டு உரிய அனுமதியை பெற்றக்கொள்ளுமாறு அறிவித்தல் ஒட்டுவதற்கு பணிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஒன்று கூடிய தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபையின் உறுப்பினர்களான சி.சுகிர்தரூபன்,சிகஜீபன் தாம் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையில் அனுமதிபெற்றதாகவும் தவிசாளர் அரசியல் காரணங்களுக்காக செயற்படுகின்றார் எனவும் வாக்குவாதப்பட்டனர். தவிசாளருடன் நின்றிருந்த உறுப்பினர் அ.கமலறேகனுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்விடத்தில் தவிசாளர் விட்டுக்கொடுப்பின்றி பெயர்பலகையினை சேதாரமன்றி அகற்றுமாறும்  அனுமதியை சபை வழங்கும் வரையில் காட்சிப்படுத்தமுடியாது கூறி அகற்றவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் குறித்தபேருந்து நிலையத்தினை ஞாபகமாக சமர்ப்பணம் செய்யப்பட்டவரின் மகன் தவிசாளரிடம் தனது தந்தையின் ஞாபகமாகவே அமைக்கப்பட்டதாகவும் தன் இவ்வாறான நடைமுறைகளை அறிந்திருக்கவில்லை எனவும் தனது இறந்த தந்தை தொடர்பான தமது குடும்பத்தின் மனிதாபிமானக் காரணத்தினை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை ஒத்திவைக்கக்கோரினார்.

மேலும் தாம் உடனடியாக அனுமதித்தேவையினை முறைப்படி பூர்த்திசெய்யும் வரையில் அவகாசம் அளிக்கக் கோரியதுடன் அதற்காக கடிதம் வழங்க சம்மதிக்கப்பட்டதனையடுத்து பிரதேச சபையின் அனுமதியற்ற கட்டிடத்திற்கு எதிரான  நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இவ்விடத்தில் நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்ள10ராட்சி மன்றங்களின் சட்டம் ஒழுங்குகளை மீறிவிட அனுமதிக்கமுடியாது. அவர்களுக்கு உள்ளுராட்சி மன்றவிடயங்களில் புரிதல் கிடையாது ஆயின் அதற்கு ஆலோசகர்களை நியமித்து செயற்பட முடியும். நாட்டில் ஆட்சியில் உள்ளனர் என்பதற்காக சட்டம் ஒழுங்கை யாரும் வளைத்துப்போடக்கூடாது. எவருக்கும் மனிதாபிமானக்காரணங்களைத் தவிர எமதுசபையின் சட்டம் ஒழுங்கு ஒரே விதமாகவே காணப்படும் என தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.