பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஆறாவது ஆண்டாக நடாத்தும்
மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்-2025 நவீன தொழில் நுட்பத்தில் இன்றும் நாளையும் நவம்பர் 15 ஆம் 16 ஆம் (சனி,ஞாயிறு) நாட்களில் இணையவழியில் நடைபெறுகின்றன.
கீழே உள்ள இணைப்பை அழுத்தித் திறனறிதலை ஆரம்பிக்கலாம்.
இதற்குரிய இணைப்பு இணைய ஊடகங்கள் ஊடாகவும் முகநூல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் குறித்த இரு நாட்களும் ஐரோப்பிய நேரம் காலை 9.00 மணி முதல் இயங்கு நிலையில் வைக்கப்படும்.
தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!
1) திறனறிதலில் அகவை வேறுபாடின்றி அனைவரும் பங்குகொள்ள முடியும்.
2) ஒருவர் ஒரு தடவை மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
3) 30 மணித்துளி(நிமிடம்) நேரமே வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் திறனறிதலைச் செய்து முடிக்கவேண்டும்.
4) நேரம் கடந்து முடிக்கப்படுமிடத்து சான்றிதழ்கள் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற மாட்டாது.
5) தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான முறையில் தமது பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.
6) தமது பெயர்கள் பிழையாகக் குறிப்பிட்டிருப்பின் அவ்வாறே சான்றிதழ்களும் கிடைக்கப்பெறும் என்பதோடு மாற்றம் செய்யமுடியாது என்பதைக் கவனத்திற் கொள்க.
மேற்காணும் நெறிமுறைக்கு ஒப்புதலளிக்கிறேன்.





