வல்வெட்டித்துறையில் மாபெரும் இரத்ததான முகாம்

தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் 82 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(16.11.2025) காலை-08.30 மணி முதல் மாலை-03 மணி வரை வல்வெட்டித்துறை கணபதி மஹால் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குருதிக் கொடை வழங்கும் அனைவரதும் பெயர்கள் உள்வாங்கப்பட்டு அதிர்ஷ்ட முறையில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு மிகவும் பெறுமதியான வெள்ளிப் பதக்கம் அணிவித்துக் கௌரவிப்பு வழங்கப்படுமென இரத்தான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.