வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (21) மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன் சபை அலுவலகத்துக்கு முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் சபைக்கு பிரசன்னமான உறுப்பினர்கள் அங்கும் அஞ்சலி செலுத்தினர்.
பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்களில் ஈ.பி.டி.பி சார்பில் இருவரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரும் மாத்திரமே இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.






