மனித பாவனைக்கு உதவாத 1,000 கிலோ அரிசி கைப்பற்றல்!

கண்டி ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த மனித பாவனைக்கு உதவாத ஆயிரம் கிலோ அரிசியை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சேதமடைந்த மனித பாவனைக்கு உதவாத இந்த அரிசியை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் 1926 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.