மேஃபீல்ட் தோட்ட குளவிக்கொட்டுச் சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் விளக்கம்

மேஃபீல்ட் தோட்டப் பிரிவில் நவம்பர் மாதம் புதன்கிழமை 26ஆம் திகதி இடம்பெற்ற குளவித் தாக்குதலில் ஒரு தொழிலாளி காயமடைந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது.

அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குளவிக்கொட்டு சம்பவத்தின்போது நோயாளர் காவு வண்டி கிடைக்காததால் தோட்ட நிர்வாகம் உடனடியாக தோட்டத்திற்கு சொந்தமான லொறி மூலம் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தது.

இருப்பினும்,  தற்காலிக வீதித் தடை காரணமாக  தொழிலாளி பின்னர் முச்சக்கரவண்டி மூலம் கொட்டகலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு அன்றே அவர் வீடு திரும்பினார்.

மறுநாள் 27ஆம் திகதியன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து   தோட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை வழங்கத் தவறிவிட்டதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆயினும் கூட  ஏனைய மூன்று தோட்டப் பிரிவுகளும் தொடர்ந்து நிர்வாகத்துடன் முழு ஒத்துழைப்பை வழங்கி செயற்பட்டு வருகின்றனர். மேலும்  நோயாளர் காவு வண்டி தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தப்படுவதை அவர்கள் ஆதரிக்கின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.