அலவத்துகொடை – அங்கும்புர பிரதான வீதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம்

கண்டி அலவதுகொட – அங்கும்புர பிரதான வீதியின் விலான பல்லேகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில்,  பிரதான பாதையில ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்து மீண்டும் ஒரு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார 150 அடி உயர மண் மேடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சாலை பல நாட்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 அடி அகலமும், நிலத்தில் ஒரு பாரிய  விரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் இந்த விரிசல் குறித்து  தனக்கு தகவல் அளித்த்தாகவும் தான்  உடனடியாக அதை பார்த்த பின்   பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குதெரிய படுத்திய தாகவும் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் அமரஜீவதெரிவித்தார். ஆனால் இன்று சனிக்கிழமை வரை (13 ) எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பெரிய மண் மேடு இடிந்து விழுந்தால், கீழே செல்லும் அலவதுகொட அங்கும்புர பிரதான வீதி  முற்றிலுமாகத் தடைபடும், மேலும் மண்ணின் அளவைப் பொறுத்து, கீழே உள்ள நெல் வயல்களும்  பாதிக்கப்படும் என்று அமரஜீவ இந்திரகுமார   மேலும் கூறினார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு  சொந்தமான பிரதான வீதியான இவ் வீதியின்  மேல் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், இவ் வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஷபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்  இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.