வட்டவளை – ரொசெல்ல பகுதியில், அனுமதி பத்திரமின்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் வட்டவளை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வட்டவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35, 43 மற்றும் 62 வயதுடைய ஹட்டன், நோர்வுட் மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





