தாய்வான் தலைநகர் தைப்பே நகரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.
27 வயதுடைய இளைஞன் ஒருவன், கத்தி மற்றும் புகை குண்டுகளுடன் தைப்பேயின் முக்கிய மெட்ரோ நிலையத்தில் தாக்குதலை நடத்தியதாக தாய்வான் பிரதமர் தெரவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேக நபரான இளைஞன் முதலில் தைப்பேயின் மத்திய நிலையத்தில் புகை குண்டுகள் வீசப்பட்டதாகவும், பின்னர் மக்கள் அதிகம் கூடும் வர்த்தகப் பகுதியாக உள்ள ஜோங்ஷான் மெட்ரோ நிலையத்தில் பலரை கத்தியால் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் , அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டதன் பின்னர் சந்தேகநபர் பல மாடிகள் கொண்ட கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த நிலையில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவரவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





