நல்லூர்க் கந்தசுவாமி ஆலய நீண்டகாலத் தொண்டர் கோபாலகிருஷ்ணன் மறைவு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் கணக்குப் பிள்ளையாக நீண்டகாலம் தொண்டாற்றிய அமரர்.தம்பிபிள்ளை கோபாலகிருஷ்ணன் புதன்கிழமை (17.12.2025)  காலை குகபதமடைந்தார்.
அன்னாரின்  இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை (19.12.2025) காலை யாழ்.நீர்வேலி காமாட்சி அம்பாள் ஆலயத்துக்கு அருகிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.