தலாத்துஓயா – குருதெனிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (20) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குளவித் தாக்குதலுக்குள்ளாகி நான்கு பேர் காயமடைந்து, தலத்துஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் குருதெனிய பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





