கண்டி மாநகர சபைக்கான வரவு – செவுத்திட்டம் நிறைவேறியது

கண்டி மாநகர சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது கண்டி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ளது.

மாநகர முதல்வர் சந்திரசிரி விஜேநாயக்க தலைமையில் நடைபெற்ற சபை அமர்வில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 25க்கு 20 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பின் போது, சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த ஓர் அங்கத்தவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்த போதும், சபை அமர்வின் போது எவரும் அதற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.