களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச சபையின் பெண் செயலாளரை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்துகம பிரதேச சபைத் தலைவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது.
மத்துகம பிரதேச சபைத் தலைவர் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னுடன் தகராறில் ஈடுபட்டு தன்னை தாக்கி காயப்படுத்தியதாக பெண் செயலாளர் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பெண் செயலாளர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மத்துகம பிரதேச சபைத் தலைவர் இன்றைய தினம் மத்துகம பொலிஸில் சரணடைந்தார்.
பொலிஸில் சரணடைந்த மத்துகம பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மத்துகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





