தமிழர்களின் செழுமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில், பிரித்தானிய தமிழர் பேரவை நீண்ட காலமாகப் பல்வேறு பண்பாட்டு மற்றும் மரபு சார்ந்த நிகழ்வுகளைப் பிரித்தானியாவில் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வரிசையில், தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான தைப் பொங்கலை “தமிழர் திருநாளாக” உலகளவில் அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இணைந்த தமிழ் மரபுத் திங்கள் விழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த மரபின் தொடர்ச்சியாக, 2026 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா, தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG T) உடன் இணைந்து, எதிர்வரும் தை மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில், மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை மிகச் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
இந் நிகழ்வு, தமிழர் அடையாளம், மரபு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் அரசியல் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மேடையாக அமையும்




