தைப்பொங்கலை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியாவில் 11 அறநெறிப் பாடசாலைகளுக்குப் பண்டிகைப் பொதிகள்

வவுனியாவில் 11 அறநெறிப் பாடசாலைகளுக்குத் தைப்பொங்கலை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் திங்கட்கிழமை (12.11.2026) பண்டிகைப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கணேசபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை, கணேசபுரம் திருமூலர் அறநெறிப் பாடசாலை, பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் அறநெறிப் பாடசாலை, வடகாடு ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை, பெரியதம்பனை வரசித்தி விநாயகர் கோவில் அறநெறிப் பாடசாலை, புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை, செட்டிக்குளம் ஞானபிள்ளையார் அறநெறிப் பாடசாலை, சிதம்பரபுரம் திருப்பழனி அறநெறிப் பாடசாலை, கோதாண்ட நொச்சிக்குளம் அறநெறிப் பாடசாலை, முதலியார்குளம் ஸ்ரீ வேல் முருகன் அறநெறிப் பாடசாலை, சிதம்பரபுரம் நாகம்பாள் அறநெறிப் பாடசாலை ஆகிய 11 அறநெறிப் பாடசாலைகளுக்கும் பூவரசங்குளம் அறநெறிப் பாடசாலையில் வைத்து மொத்தமாக ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபா பெறுமதியான பண்டிகைப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.